குஜராத்தில் ரூ. 35,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்! பிரதமர் மோடி அடிக்கல்!
இந்திய வர்த்தகத்தின் முதுகெலும்பாகும் சரக்கு வழித்தடங்கள் திகழ்வதை பற்றி..
நாட்டில் வளர்ச்சிப் பணிகள் மந்தமாக இருந்ததற்காக, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசே காரணம் எனப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகச் சாடினார்.
குஜராத்தின் வதோதராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 35,000 கோடி திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தையும் உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியையும் இணைக்கும் 'மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்தின்' மூன்று முக்கியப் பிரிவுகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் உயிர்நாடியாக இந்த சரக்கு வழித்தடங்கள் திகழ்கின்றன. இந்த நவீன சரக்கு போக்குவரத்து கட்டமைப்புக் காரணமாக இந்தியாவின் மாற்றம் துரிதமடைந்துள்ளது.
2014-க்குப் பிறகு, இந்தியா 50 ஆயிரம் நவீன ரயில் பெட்டிகளை உருவாக்கியுள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசால் 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை.
முன்பெல்லாம் பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் இயங்க வேண்டியிருந்ததால், பயணிகள் பயணம் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டும் மந்தமாக இருந்தன. ஆனால் இந்த பிரத்யேக சரக்கு வழித்தடம் அந்த நிலையை மாற்றியுள்ளது.
இன்று, கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடங்கள் நாட்டின் வர்த்தகம் மற்றும் வணிகத்தின் முக்கிய முதுகெலும்பாக மாறி வருகின்றன. 2,800 கி.மீ. நீளமுள்ள இந்த பிரத்யேக சரக்கு வழித்தடம், கடந்த 12 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சிக்குச் சான்றாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
Prime Minister Narendra Modi on Tuesday slammed the previous Congress-led regime in the country for the slow pace of development work, adding "Naraz Fufa" will now question the impact of the dedicated freight corridor on truck drivers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.