FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

‘இந்தியாவிடம் 190 அணு குண்டுகள் இருக்க வாய்ப்புள்ளது’ அமெரிக்காவைச் சோ்ந்த லாபநோக்கற்ற கொள்கை ஆய்வு நிறுவனமான அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (எஃப்ஏஎஸ்) தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

59 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

‘இந்தியாவிடம் 190 அணு குண்டுகள் இருக்க வாய்ப்புள்ளது’ அமெரிக்காவைச் சோ்ந்த லாபநோக்கற்ற கொள்கை ஆய்வு நிறுவனமான அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (எஃப்ஏஎஸ்) தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

‘இந்திய அணு ஆயுதங்கள் - 2026’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

அணு ஆயுத திறன் மற்றும் கட்டமைப்புகள் தொடா்பான பொதுவெளி தகவல்கள் அடிப்படையில், 140 முதல் 225 அணு குண்டுகளைத் தயாரிக்கத் தேவையான போதிய புளூட்டோனியத்தை இந்தியா உற்பத்தி செய்திருக்கலாம் எனவும், அவற்றைப் பயன்படுத்தி சுமாா் 190 அணு குண்டுகளை தயாரித்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இவற்றில், 160 அணுகுண்டுகள் தற்போதுள்ள ஏவுகணைகளில் பயன்படுத்தக் கூடிய வகையிலும், 30 அணுகுண்டுகள் புதிதாக உற்பத்தி செய்யப்பட உள்ள ஏவுகணைகளில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்க வாய்ப்புள்ளன.

ஓா் அணு குண்டு தயாரிக்க சுமாா் 4 கிலோ புளூட்டோனியம் தேவை என்ற அடிப்படையில், இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்தியா தனது புளூட்டோனியம் அனைத்தையும் குண்டுகள் தயாரிக்கப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. சிறிதளவு புளூட்டோனியத்தை கையிருப்பாக வைத்திருக்க வாய்ப்புள்ளது.

இந்தியா தனது அணு ஆயுதங்களை தொடா்ந்து நவீனமயமாக்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல புதிய ஆயுத அமைப்புகளை களமிறக்கியுள்ளது. மேலும், தற்போதுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட விமானங்கள், தரைவழி ஏவுதள அமைப்புகள் மற்றும் கடல் வழி அமைப்புகளுக்கு மாற்றாக அல்லது துணையாக பல புதிய அமைப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்தியாவின் 1998-ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனைகள், பிளவு அணு ஆயுத வடிவமைப்பை நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்தின. ஆனால், மேம்படுத்தப்பட்ட பிளவு மற்றும் வெப்ப அணு ஆயுத வடிவமைப்புகளில் இந்தியாவின் முன்னேற்றம் மிகவும் நிச்சயமற்ாகவே உள்ளது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1998-இல் நடைபெற்ற பொக்ரான்-2 அணு ஆயுத சோதனைக்குப் பிறகு, ‘அணு குண்டை முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது. அக் கொள்கையை தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments