திருமலைக்கு வந்துள்ள ஆனந்த் அம்பானி அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துகள்!
ஆனந்த் அம்பானி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துக திருமலைக்கு வந்துள்ளது தொடர்பாக...
திருப்பதி: திருமலைக்காக ஆனந்த் அம்பானி அறிவித்த 25 புதிய மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்காக திருமலைக்கு வந்துள்ளன.
கடந்த ஜூன் மாதம் திருமலைக்கு வருகை தந்திருந்த ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 புதிய மின்சாரப் பேருந்துகள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் அனந்த் அம்பானி ரூ.27.5 கோடி மதிப்பிலான 25 புதிய மின்சாரப் பேருந்துகள், 50 ஓட்டுநர்கள் மற்றும் ஒரு மின்னேற்ற நிலையம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்க உள்ளாா்.
Advertisement
Advertisement
இதன் ஒரு பகுதியாக, இந்த 25 பேருந்துகளும் ஞாயிற்றுக்கிழமை திருமலை வந்தடைந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒரு பேருந்து திருமலைக்கான சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது; அதிகாரிகள் அதன் செயல்பாட்டை மதிப்பீடு செய்தனர்.
திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதியை அளிப்பதே இந்த பேருந்துகளின் நோக்கமாகும்.
வரும் மாதம் 16 ஆம் தேதி காலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இவற்றை முறைப்படி தொடங்கி வைப்பாா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுடன், பாரத் பயோடிக் நிறுவனம் வழங்கும் மேலும் 7 மின்சாரப் பேருந்துகளும் திருமலையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துப் பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பக்தர்கள் பொதுப் போக்குவரத்து வசதியை எளிதாகப் பெற முடியும் என்பதோடு, தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The donation includes 25 electric buses, 50 drivers and charging stations. The electric buses are aimed at providing convenient transportation for devotees visiting Tirumala.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.