FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: அமித் ஷா

நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுவது குறித்து...

13 செப்டம்பர் 2026, 10:05 pm IST
மத்திய அமைச்சர் அமித் ஷா - PTI
பகிர்:

வருகிற 2029 ஆம் ஆண்டுக்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால ஆட்சியையும் முன்னிட்டு, செப். 17 முதல் ஒரு மாத காலத்துக்கு பாஜக பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறது.

இதுகுறித்த அறிவிப்பின்போது மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "2014-க்கு முன்னர் இருந்த ஊழல், சாதிய அரசியல், வாரிசு அரசியல் காலகட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பாஜக தலைமையிலான அரசின்கீழ் தற்போது செயல்பாட்டைக் கொண்ட அரசியல் முறைக்கு நாடு மாறியுள்ளது. தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால், நாட்டின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில் முத்தலாக் ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். மேலும், பாஜக - என்டிஏ கூட்டணி ஆளும் மாநிலங்களில் 2029 ஆம் ஆண்டுக்குள் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

நாட்டின் மொழிகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. சட்டப்பிரிவு 370, இடதுசாரி தீவிரவாதம், வடகிழக்கில் உள்ள பாதுகாப்பு சவால்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. துல்லியமான தாக்குதல், வான்வழித் தாகுதல், ஆபரேசன் சிந்தூர் போன்றவை பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை நிலைநாட்டியுள்ளன.

சேவா சங்கல்ப் அபியான் (மக்கள் சேவையே மகேசன் சேவை) பிரசாரமானது, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது" என்று தெரிவித்தார்.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக, மதத்தைக் கடந்த சட்டமாக பொது சிவில் சட்டங்கள் உள்ளன. நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என ஒரு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும்போதிலும், இந்தச் சட்டத்துக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

summary

By 2029, 21 NDA-ruled states will have Uniform Civil Code, says Home Minister Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments