FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மொத்த விலை பணவீக்கம் 9.78%-லிருந்து 9.92%-ஆக உயர்வு

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம், 9.78 சதவிகிதத்தில் இருந்து 9.92 சதவிகிதமாக உயர்ந்தது குறித்து...

14 செப்டம்பர் 2026, 1:28 pm IST
மொத்த விலை பணவீக்கம் உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம், ஜூலை மாதத்தில் 9.78 சதவிகிதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

உணவு, எரிபொருள், உற்பத்திப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index) உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஜூலை மாதத்தில் 9.78 சதவிகிதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவிகிதமாக உயர்ந்தது.

மொத்த விலை பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் எரிபொருள், மின்சாரச் செலவுகளே. இவை ஜூலை மாதத்தில் 20.05 சதவிகிதத்திலிருந்து 22.93 சதவிகிதமாக உயர்ந்துள்ளன.

Advertisement

Advertisement

உற்பத்திப் பொருள்களின் பணவீக்கம் ஜூலையில் 8.29 சதவிகிதத்திலிருந்து 8.37 சதவிகிதமாகவும், உணவுப் பொருள்கள் பணவீக்கம் 6.65 சதவிகிதத்திலிருந்து 7.05 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன.

சீரற்ற பருவமழை உள்ளிட்ட காரணங்களால் உணவு விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்க்கரை, தானியங்கள், சமையல் எண்ணெய், பால், முட்டை, இறைச்சி போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், சமையல் எரிவாயுவின் விலையும் உயர்ந்து பணவீக்க அழுத்தங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

summary

WPI inflation touches 9.92% in August on rising prices of food, fuel, manufactured items

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments