நந்திகிராம் இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும்: சுவேந்து அதிகாரி
நந்திகிராம் இடைத்தேர்தல் பற்றி...
மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என அந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதியளித்தார்.
நந்திகிராம் மற்றும் ரெஜினாநகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கொல்லப்பட்ட தனது உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயாரும் பாஜக வேட்பாளருமான ஹசிராணி ரத், நந்திகிராம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஹசிராணி ரத்தின் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக, சுவேந்து அதிகாரி கட்சித் தொண்டர்களுடன் இணைந்து எஸ்.டி.ஓ அலுவலகத்திற்கு நடந்து சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
அப்போது சுவேந்து அதிகாரி கூறுகையில்,
தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்று குறிப்பிட்ட சுவேந்து அதிகாரி, யாரும் கற்பனை செய்து கூடப் பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நந்திகிராமில் பாஜக வெற்றி பெறும் என்று அவர் உறுதியளித்தார்.
மே 9-ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் கடந்த நான்கு மாதங்களாக மாநிலத்தில் உள்ள பாஜக அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், மக்களின் நலனுக்காகவும் மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் அடுத்த 56 மாதங்களுக்கு அரசு தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.
ரெஜிநகர் மற்றும் நௌடா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஏஜேயுபி தலைவர் ஹுமாயூன் கபீர், ரெஜிநகர் தொகுதியை ராஜிநாமா செய்ததையடுத்து இந்த தொகுதி காலியானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.