பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் வாழ்த்து தெரிவித்தது பற்றி..
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து ரஷி அதிபர் புதின் கூறியதாவது,
பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே மரியாதையையும், உலக அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றுள்ளார். இந்தியா-ரஷியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் உங்கள் தனிப்பட்ட பங்களிப்பு அளப்பரியது.
Advertisement
Advertisement
சமீபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்தபோது, அப்பயணத்தின்போது தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்காக நன்றியைத் தெரிவித்தார்.
மாநாட்டில் நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆழமானதாகவும், வெளிப்படையானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தன. எப்போதும் போல, உங்களுடன் உரையாடியது உண்மையான மகிழ்ச்சியை அளித்தது. எங்கள் விவாதங்கள் உங்கள் அசாதாரண அரசியல் ஞானத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தின.
நமது நட்பு நாடுகளின் நலனுக்காக முக்கியமான இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நாங்கள் நிச்சயமாகத் தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.