FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இரவோடு இரவாக அனுமதியின்றி நிறுவப்பட்ட சித்தராமையா சிலை!

கர்நாடகத்தில் அனுமதியின்றி நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சிலை அகற்றப்பட்டது குறித்து...

17 செப்டம்பர் 2026, 7:01 pm IST
அனுமதியின்றி நிறுவப்பட்ட சித்தராமையாவின் சிலை... - X
பகிர்:

கர்நாடகத்தில், இரவோடு இரவாக அனுமதியின்றி நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சிலை அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் கலபுரகி மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் 9 அடி உயர சிலையை அவரது ஆதரவாளர்கள் சிலர் நேற்று (செப். 16) இரவோடு இரவாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகளின் அனுமதியின்றி நிறுவியுள்ளனர்.

இந்தச் சிலையானது கலபுரகியிலுள்ள கனகபுரா கோயிலுக்கு முதல்வர் டி.கே. சிவகுமார் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்ததால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உரிய அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலையை கலபுரகி நகராட்சி அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து அகற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சிலை நிறுவப்பட்ட பகுதிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பெயரைச் சூட்ட வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் ஆதரவாளர்களால் அனுமதியின்றி நிறுவப்பட்ட சித்தராமையாவின் சிலையை அதிகாரிகள் அகற்றினர்.

முன்னதாக, கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சித்தராமையா கடந்த மே மாதம் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

summary

a statue of former CM Siddaramaiah, which had been installed without permission overnight in Karnataka, has been removed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments