பிகார், மேற்கு வங்கம், சிக்கிம், கேரளத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பிகார், மேற்கு வங்கம், சிக்கிம், கேரளத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பிகார், ஒடிசா, இமயமலை அடிவார மேற்கு வங்கம், சிக்கிம், கேரளம மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்று(செப்.18) கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உத்தரகண்ட், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், கொங்கண், கோவா, கர்நாடகம் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை(செப்.18) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Advertisement
Advertisement
அடுத்த இரண்டு நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளம், மாஹி, வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMD has forecast heavy rainfall in Bihar, Odisha, Sub-Himalayan West Bengal, Sikkim, Kerala and Rajasthan today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.