FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மென்பொருள் சேவை ஏற்றுமதி ரூ.22.25 கோடி: ரிசர்வ் வங்கி

இந்திய மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 221.4 பில்லியன் டாலராக (ரூ.22.25 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது தொடர்பாக...

19 செப்டம்பர் 2026, 12:04 pm IST
மென்பொருள் சேவை ஏற்றுமதி ரூ.22.25 கோடி: ரிசர்வ் வங்கி - ரிசர்வ் வங்கி(கோப்புப்படம்)
பகிர்:

இந்திய மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 2025-26 இல் 8.2% அதிகரித்து 221.4 பில்லியன் டாலராக (ரூ.22.25 லட்சம் கோடி) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:

2025-26 நிதி ஆண்டில் இந்திய மென்பொருள் சேவை ஏற்றுமதி 8.2% அதிகரித்து 221.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் ஏற்றுமதி குறித்த ரிசர்வ் வங்கி நடத்திய ஆண்டுக்கான ஆய்வில் கலந்து கொள்ள 7,569 மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களை அணுகிய நிலையில், அவற்றில் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் உள்பட 2,363 நிறுவனங்கள் மட்டுமே உரிய பதில்களை அளித்தன. ஒட்டுமொத்த மென்பொருள் ஏற்றுமதியில் அந்த நிறுவனங்களின் பங்கு சுமார் 89 சதவீதமாக இருந்தது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் ஏற்றுமதியில், பிபிஓ சேவைகள் முக்கியப் பங்காற்றின; இது அந்த ஆண்டில் நாட்டின் மொத்த மென்பொருள் சேவை ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய மென்பொருள் ஏற்றுமதி சேவையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பா உள்ளது.

இந்திய மென்பொருள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தொடர்ந்து மிகப்பெரிய சந்தையாக (54.1%) திகழ்கிறது; அதைத் தொடர்ந்து ஐரோப்பா 31.8 சதவீதப் பங்களிப்புடன் உள்ளது. இதில் இங்கிலாந்தின் பங்கு 15.4 சதவீதமாக உள்ளது. மென்பொருள் சேவைகள் பெரும்பாலும் 'ஆஃப்-சைட்' முறையில் வழங்கப்பட்டுள்ளன; இது மொத்த ஏற்றுமதியில் 91.7 சதவீதமாகும்.

வெளிநாடுகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகள் உள்பட, மொத்த மென்பொருள் சேவை ஏற்றுமதி 2025-26-ல் 9.5 சதவீதம் அதிகரித்து 239.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மேலும், இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகளின் உள்ளூர் மென்பொருள் வணிகம், முந்தைய ஆண்டின் 13.9 பில்லியன் டாலரிலிருந்து 2025-26-இல் 17.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது; இதில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை முக்கிய சந்தைகளாகத் தொடர்கின்றன.

summary

India’s software services exports increased 8.2% year-on-year to 221.4 billion dollars in 2025-26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments