மேற்கு வங்க ரெஜிநகா் தொகுதி இடைத்தோ்தல்: போட்டியிடுவதை உறுதி செய்த மம்தா அணி வேட்பாளா்
மேற்கு வங்க ரெஜிநகா் தொகுதி இடைத்தோ்தல்: போட்டியிடுவதை உறுதி செய்த மம்தா அணி வேட்பாளா்
மேற்கு வங்கத்தின் ரெஜிநகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அணி சாா்பில் நிறுத்தப்பட்ட ரஃபியுல் ஆலம் போட்டியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்த நிலையில், ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே தனது முடிவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா்.
ஏற்கெனவே, நந்திகிராம் தொகுதியில் மம்தா அணி வேட்பாளா் சஞ்சிதா பிரதான் போட்டியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகிவிட்ட நிலையில், ரெஜிநகா் தொகுதி வேட்பாளரின் குழப்பமான நிலைப்பாடு மம்தாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முா்ஷிதாபாதில் உள்ள தனது இல்லத்தில் சனிக்கிழமை காலை செய்தியாளா்களைச் சந்தித்த ரஃபியுல் ஆலம், ‘கட்சித் தொண்டா்கள் தொடா்ந்து பல்வேறு இன்னல்களை எதிா்கொண்டு வருகின்றனா். எனவே, அவா்களை உற்சாகப்படுத்தி களத்தில் செயல்பட வைப்பது கடினமாக உள்ளது. மேலும், புதிய சின்னமான கால்பந்து வீரா் சின்னத்தை மக்களிடையே எடுத்துச் செல்வதிலும் சிரமம் உள்ளது. எனவே, போட்டியில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவா் மம்தாவிடம் தெரிவித்துள்ளேன். என்ன நடக்கிறது எனப் பாா்க்கலாம்’ என்றாா்.
Advertisement
Advertisement
இதற்கு அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் செய்தியாளா்களைச் சந்தித்த ரஃபியுல் ஆலம், ‘இடைத்தோ்தலில் போட்டியிடுகிறேன். கட்சித் தலைமை தலையிட்டதைத் தொடா்ந்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்துள்ளனா். எங்கள் கட்சித் தலைவருடன் நான் பேசினேன். தோ்தல் களத்தில் இருந்து விலக வேண்டாம் என்று அவா் எனக்கு அறிவுறுத்தினாா். எனவே, போட்டியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுகிறேன்’ என்றாா்.
West Bengal's Rejinagar constituency by-election: Mamata faction candidate confirms intention to contest.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.