தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து கே.சி. வேணுகோபால் பேசியது தொடர்பாக...
நாட்டின் தேர்தல் முறையைச் சிதைக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (செப். 23) குற்றம் சாட்டினார்.
நாட்டின் ஜனநாயகத்தையே ஞானேஷ் குமார் சீரழிக்கிறார் என மற்ற பாஜகவால் நியமிக்கப்பட்ட மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் கூறுவதையும் வேணுகோபால் சுட்டிக்காட்டினார்.
கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இது தொடர்பாக அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
''தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி என்னென்ன குற்றச்சாட்டுகளை வைத்தாரோ அவை அனைத்தும் வெளிப்பட்டுவிட்டது. யாரால் தெரியுமா? காங்கிரஸால் அல்ல; பாஜகவால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களால்தான்.
தலைமைத் தேர்தல் ஆணையர் தனிச்சையாக செயல்படுவதாக மற்ற இரு ஆணையர்களும் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் ஜனநாயகத்தையே கொல்லும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
நான் முழுப்பொறுப்புடன் தெளிவாக கூறிக்கொள்கிறேன். நாட்டின் தேர்தல் முறையையும் தேர்தல் வாக்காளர் பட்டியலையும் சிதைக்க நரேந்திர மோடியும் அமித் ஷாவும் ஞானேஷ் குமாருடன் இணைந்து குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் முழுவதும் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் பட்டியலில் இருந்து நீக்கலாம். அவர்கள் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஞானேஷ் குமார் ஒரு குற்றவாளியைப்போல் நடந்துகொள்கிறார். இந்தியா ஒருபோதும் இவ்வாறு நடந்துகொள்ள அவரை இனி அனுமதிக்காது. நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
Narendra Modi Amit Shah Gyanesh Kumar had a criminal conspiracy to hijack the election system KC Venugopal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.