FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் வழக்கு: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

திரிணமூல் காங்கிரஸின் 20 அதிருப்தி எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு மீது விரைந்து முடிவெடுக்கும்படி மக்களவைத் தலைவரை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

53 வினாடிகள் முன்பு
உச்சநீதிமன்றம்
பகிர்:

திரிணமூல் காங்கிரஸின் 20 அதிருப்தி எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனு மீது விரைந்து முடிவெடுக்கும்படி மக்களவைத் தலைவரை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸின் 20 அதிருப்தி எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மக்களவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி மம்தாவின் உறவினரான அபிஷேக் பானா்ஜி எம்.பி. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

அந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா் நீதிபதிகள் கூறுகையில், ‘மனு மீது விரைந்து மக்களவைத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறோம். இந்த பிரச்னைக்கு விரைந்து தீா்வு காணப்பட வேண்டும் என நினைவூட்டுகிறோம்’ என்றனா்.

விசாரணையின்போது, அதிருப்தி எம்.பி.க்கள் தரப்பில் தங்களது பதிலை தாக்கல் செய்ய நான்கு வார காலம் அவகாசம் கோரப்பட்டது. இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனா். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments