FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

2 தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்!

தவெக தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறை தமிழக தேர்தல் அரசியலுக்கு புதிதல்ல.

Updated On : 31 மார்ச் 2026, 3:21 am IST
ஜெயலலிதா | கிருஷ்ணசாமி | விஜய்
பகிர்:

தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறை தமிழக தேர்தல் அரசியலுக்கு புதிதல்ல.

ஒரு தேர்தலில் ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கட்டுப்பாடு 1995ஆம் ஆண்டு வரை கிடையாது. ஆனால், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வென்றால், ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை 10 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது.

இந்த நிலையில், 1996ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, ஒரு வேட்பாளர் ஒரு தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழகத்தைப் பொருத்தவரை, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. 1991 பேரவைத் தேர்தலில் காங்கயம் மற்றும் பர்கூர் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் காங்கயம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடலாம் என்ற விதி இருந்தபோதும், 2001 பேரவைத் தேர்தலில் புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை என நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். ஆனால் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

2001 தேர்தலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமியும் வால்பாறை மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் இரண்டிலும் தோல்வியடைந்தார்.

தமிழகத்தில் 2001க்குப் பிறகு கட்சித் தலைவர்கள் யாரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவில்லை. இந்த நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தவக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1991ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், அது அவருடைய முதல் தேர்தல் அல்ல. ஏற்கனவே 1989ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அதே நேரத்தில், தமிழகத்தில் தோல்வியே காணாத சட்டப்பேரவை உறுப்பினராக விளங்கிய கருணாநிதி, 1957 முதல் 2016 வரை அவர் சந்தித்த 13 தேர்தல்களிலும் ஒரே தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments