FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 3 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை.

Updated On : 23 நவம்பர் 2024, 1:55 pm IST
சிவகுமார்
பகிர்:

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பரத் பொம்மையின்(ஷிக்காவ்ன் பாஜக வேட்பாளர்) தோல்வியென்று நான் கூறவில்லை, அவர் தந்தை செய்த செயலுக்கு மக்களிடம் வந்த செய்தி.

இரண்டு விஷயங்கள் வேலை - மேம்பாடு மற்றும் உத்தரவாதங்கள் மட்டுமே. குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை நிறுத்த வேண்டும், பணியில் கவனம் செலுத்த வேண்டும், இதுவே மக்களிடம் இருந்து வந்த செய்தி.

Advertisement

Advertisement

இதுதான் ஆரம்பம். வரும் 2028 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சந்தூர், ஷிக்காவ்ன், சென்னப்பட்டணம் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments