FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 1 மார்ச் 2025, 9:21 am IST
முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி
பகிர்:

புதுதில்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 72 ஆவது பிறந்தநாளை சனிக்கிழமை(மார்ச்.1) கொண்டாடுகிறார்

இதையொட்டி இன்று காலை அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கிவைத்தார்.

Advertisement

Advertisement

மாணவ, மாணவிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர், பிறந்தநாளையொட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments