பொய்க்கால் குதிரை அரசே! இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா? - அதிமுக
பொய்க்கால் குதிரை அரசே! இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா? என முதல்வர் விஜய்க்கு அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 6 பேரை அரிவாளால் வெட்டி தப்பிச்சென்ற முகமூடி அணிந்த கும்பலை போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், பொய்க்கால் குதிரை அரசின் முதல்வருக்கு சட்டம்- ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அதிமுக ஐடி விங் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் சா்ச் தெருவில் உள்ள திருமண வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட குழு அங்கிருந்த 6 பேரை ஓட ஓட துரத்தி வெட்டிவிட்டு தப்பிச் சென்ற நிலையில், னா்.
Advertisement
Advertisement
மதுராந்தகம் அருகே 75 வயது மூதாட்டியை கழுத்தில் இருந்த நகையை பறித்து - கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து கொலை செய்த தவெக நிர்வாகி.
வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் 25 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுப்பு.
ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் 6 இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்.
நெல்லை - தெற்குப்பட்டியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்.
பொய்க்கால் குதிரை அரசே!
இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா?
மாற்றம், புதிய அரசியல் அப்டின்னு பக்கம் பக்கமா வசனத்தை, பேப்பரை பார்த்து மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சு ஆட்சியை பிடிச்ச இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்வருக்கு சட்டம்- ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா?
குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை! ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஒண்ணுமே பண்ணாம அமைதி நிலையில் வாய்மூடி மௌனியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு!
வெறும் பிஆர் பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது.
அதுனால நடிகர் விஜய் சார்! பிஆர்ல்டப்-லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும், உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க என கூறப்பட்டுள்ளது.
Criminals harbor not even a shred of fear-neither of the law nor of the police! Yet, the government—which ought to be taking action-remains completely passive...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.