FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அழகிய இல்லம்

முட்டை வேகவைப்பான்கள் வீடுகளுக்குப் பயனுள்ளதா?

ஆயிரம் ரூபாய் முதல் பல வகை மற்றும் அளவுகளில் முட்டை வேகவைப்பான்கள் விற்பனையில்..

Updated On : 24 ஜூலை 2026, 3:53 pm IST
பகிர்:

வீடுகளில் முட்டையை வேகவைப்பது என்பது பெரிய வேலையில்லை. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டையைப் போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்தால் போதும். ஆனால், மிகவும் பர்ஃபெக்டாக முட்டையை வேகவைப்பதற்கென்றே முட்டை வேகவைப்பான்கள் பல ஆண்டு காலமகா சந்தைகளில் விற்கப்படுகின்றன.

முட்டை வேகவைப்பான்களைப் பயன்படுத்தி முட்டை வேகவைக்கும்போது அந்த வேலை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் நிகழும் என்றால் வாங்கலாம்தானே.

பல முன்னணி நிறுவனங்கள், சிறிய குடும்பங்கள் முதல் பெரிய குடும்பங்களுக்கு ஏற்றது முதல் பல அளவுகளில் முட்டை வேகவைப்பான்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

சிலர், வீடுகளில் தினமும் முட்டையை வேக வைப்பார்கள். அதுபோன்றவர்களுக்காகவே வந்திருக்கிறது இந்த முட்டை வேகவைப்பான்கள்.

குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் முட்டையை வேகவைத்து அவர்களே சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் இதனை வாங்கலாம்.

தினமும் முட்டை சாப்பிடுபவராக இருந்து, ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட முட்டைகளை வேக வைக்க வேண்டும் என்றாலும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.

தேவையான விதத்தில் முட்டையை வேக வைத்துக் கொள் ளவேண்டும், ஒரு முறை பஜ்ஜி செய்ய, மறுமுறை குழந்தைகளுக்கு மிருதுவானதாக இருக்க என பல விதங்களில் முட்டைகளை வேக வைக்கவும் உதவுகிறது.

சமையல் நேரத்தின்போது வீட்டில் எப்போதும் மூன்று பர்னர்களும் பிசியாக இருக்கும், போதிய இடம் இருக்கிறது. புதிய அப்ளையன்ஸ்கள் பயன்படுத்த ஆர்வம் இருக்கிறது என்றாலும் இந்த முட்டை வேகவைப்பானைப் பயன்படுத்தலாம்.

ஒருவேளை, பயன்படுத்தி நன்றாக இருந்தால், மற்றவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வாங்கும்போது அதனை தேர்வு செய்யவும் வசதியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments