FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ரசிக்க... ருசிக்க...

‘கார்த்திகை ஸ்பெஷல் அவல்பொரி உருண்டை’ வீட்டிலும் செய்யலாம் ஈஸி தான்!

நம்மூரில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திருவிழாவும், பண்டிகையும் வந்து கொண்டே தான் இருக்கும். இது கார்த்திகை மாதத்திற்கு உகந்த அவல்பொரி உருண்டை ரெஸிப்பி.

Updated On : 24 நவம்பர் 2018, 1:32 pm IST
பகிர்:

தேவையான பொருட்கள்:

  • அவல்பொரி - 200 கிராம்
  • பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் வில்லை - 1 சிறிய வில்லை (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • பனை வெல்லப் பாகு - தேவையான அளவு
  • நெய் - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை ஏற்றி 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு. காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்த தேங்காய் வில்லையைச் சேர்த்து தேங்காய் உலர்ந்து சிவக்கும் வரை நன்கு பொரிக்கவும். பின்பு அதனுடன் ஒன்றிரண்டு ஏலக்காயை உறித்துச் சேர்த்து கூடவே ஒரு டீஸ்பூன் சுக்கும் சேர்த்துக் கிளறவும். பின்பு அதனோடு 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையும் சேர்த்து கடலை நொறு நொறுவென சிவக்கப் பொரியும் வரை வறுத்து எடுத்து தனியாக ஒரு கப்பில் வைக்கவும்.

Advertisement

Advertisement

வெல்லப்பாகு தயாரிக்கும் முறை:

200 கிராம் பொறிக்கு 100 கிராம் அல்லது 150 கிலோ கிராம் வெல்லம் தேவைப்படலாம். முதலில் வெல்லத்தைப் பொடியாக்கி நீரில் கரைத்து வடிகட்டி தூசு, துரும்பு நீக்கி ஒரு கப்பில் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பிலேற்றிய வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றிக் காய்ச்ச வேண்டும். பாகு காய்ச்சும் போது கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் பாகு கம்பிப் பதம் வந்ததும் இறக்கி இளஞ்சூடான பதம் வந்ததும் அதில் முன்னரே வறுத்து வைத்த பொருட்களைப் போட்டுக் கலக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதே சூட்டில் முன்பே எடுத்து வைத்த அரிசிப் பொரியையும் போட்டுப் பிரட்டவும்.

இளஞ்சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்தால் கடைகளில் விற்கப்படுவதைப் போன்றே நன்கு உருண்டை பிடிக்க வரும். ஆற வைத்து ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு தினமொன்றாகப் பள்ளிகளுக்கு கொடுத்து விடலாம்.

அரிசிப் பொரியும், பொட்டுக் கடலையும் எளிதில் ஜீரணமாகக் கூடியதென்பதோடு வளரும் குழந்தைகளின் ஆரோக்யத்திற்கும் மிகவும் உகந்தது. அத்துடன் பனை வெல்லம் வேறு சேர்க்கிறோமா அதனால் கிடைக்கும் சத்துக்களும் வளரிளம் குழந்தைகளுக்கு தேவையானவையே! சுக்கு சேர்ப்பதால் அஜீரணக் கோளாறைத் தவிர்க்கலாம். ஏலக்காய் வாசம் சாப்பிடத் தூண்டும்.

நம்மூரில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திருவிழாவும், பண்டிகையும் வந்து கொண்டே தான் இருக்கும். இது கார்த்திகை மாதத்திற்கு உகந்த அவல்பொரி உருண்டை ரெஸிப்பி. செய்து சாப்பிட்டுப் பார்த்து விட்டு அந்த அனுபவத்தை எங்களிடம் பகிருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments