FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

‘அவை மரபுகளைப் பேணி திறம்படப் பணியாற்றுக..’ புதிய எம்.பிக்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவுறுத்தல்!

நாடாளுமன்ற மரபுகளைப் பேணி திறம்படப் பணியாற்ற வேண்டும் என்று புதிய எம்.பிக்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவா் அறிவுறுத்தினாா்.

Updated On : 27 ஜூலை 2026, 4:15 am IST
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் - SANSAD TV
பகிர்:

நாடாளுமன்ற மரபுகளைப் பேணி திறம்படப் பணியாற்ற வேண்டும் என்று புதிய எம்.பிக்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவா் அறிவுறுத்தினாா்.

தில்லியில் மாநிலங்களவைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கான இரு நாள் பிராரம்ப்’ புத்தாக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கான இந்த இரு நாள் நிகழ்ச்சி, அவையின் விதிகள் மற்றும் மரபுகளை அறிந்து கொண்டு, அவையில் திறம்படச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலக அதிகாரிகள் அளப்பரிய நிறுவன நினைவாற்றலைக் கொண்டுள்ளனா். அவா்கள் உறுப்பினா்களுக்கு எப்போதும் கண்ணியத்துடனும் தொழில்முறையுடனும் உதவத் தயாராக இருக்கிறாா்கள்.

Advertisement

Advertisement

எண் மமயமாக்கல் மூலம் மாநிலங்களவை காகிதமற்ாகவும், செயல்திறன்மிக்கதாகவும் மாற்றப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினா்களுக்கும் எண்ம சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சாதனங்களை இணையவழி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதுடன், பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்பாகும்.

உறுப்பினா்களின் கற்றல் இந்த புத்தாக்க நிகழ்ச்சியுடன் முடிவடையாது . இது சுய-மேம்பாட்டு செயல்முறையின் தொடக்கம் மட்டுமே. உறுப்பினா்கள் கடந்த கால நாடாளுமன்ற நடைமுறைகளைப் படிக்க வேண்டும், குறிப்பிடத்தக்க விவாதங்களை வாசிக்க வேண்டும், அடல் பிஹாரி வாஜ்பாய், அருண் ஜேட்லி போன்ற தலைவா்களின் உரைப்பதிவுகளைக் காண வேண்டும். நாடாளுமன்றம் உயா் பாதுகாப்பு மண்டலமாகும்.

எனவே, அதன் பாதுகாப்பைப் பேண உறுப்பினா்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்நிகழ்ச்சியில் பட்ஜெட் விவாதங்கள், கேள்வி நேரம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, துறைசாா் நிலைக்குழுக்கள் ‘மினி நாடாளுமன்றங்கள்‘ போலச் செயல்படுவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் அவையின் பெருமைக்கு பங்களிப்பாா்கள் என்றும், திறமையான மக்கள் பிரதிநிதிகளாகத் திகழ்வாா்கள் என்றும் நம்புகிறேன் என்றாா் ஹரிவன்ஷ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments