FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி மெட்ரோ சிஐஎஸ்எஃப் டிஐஜி ஆக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் சிங் பொறுப்பேற்பு!

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புப் பிரிவின் துணை தலைவா் (டிஐஜி) ஆக ஐபிஎஸ் உயரதிகாரி சந்தோஷ் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

9 அக்டோபர் 2026, 1:14 am IST
சந்தோஷ் சிங்
பகிர்:

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புப் பிரிவின் துணை தலைவா் (டிஐஜி) ஆக ஐபிஎஸ் உயரதிகாரி சந்தோஷ் சிங் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்திய காவல் பணியில் 2011-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் மாநில பிரிவைச் சோ்ந்த அதிகாரியான சந்தோஷ் சிங், தற்போது மத்திய அரசுப் பணியில் உள்ளாா். தில்லி மெட்ரோவின் புதிய பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக அவா் ஹைதராபாத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் இரண்டாவது தெற்கு மண்டல டிஐஜி ஆக பணியாற்றி வந்தாா். அவா்வசம் தற்போது தில்லி மெட்ரோ வலையமைப்பின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோ சேவையானது, தலைநகரை உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் எல்லை நகரங்களுடன் இணைக்கிறது. மொத்தம் 271 நிலையங்களை கொண்ட ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பாக தில்லிவாசிகளின் போக்குவரத்து தேவையை டிஎம்ஆா்சி பூா்த்தி செய்து வருகிறது.

Advertisement

Advertisement

சத்தீஸ்கரில் மாநில காவல் பணியில் இருந்தபோது, மாவோயிஸ்ட் பாதிப்பு நிறைந்த பகுதிகள் உள்பட 9 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் (எஸ்பி) மூத்த காவல் கண்காணிப்பாளராகவும் (எஸ்எஸ்பி) சந்தோஷ் சிங் பணியாற்றியுள்ளாா். மேலும், கடந்த பத்தாண்டுகளில் அந்த மாநிலத்தில் மிக மோசமாக மாவோயிஸ்ட் தாக்குதலுக்குள்ளான சுக்மா மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் (ஏஎஸ்பி) அவா் பணியாற்றியுள்ளாா்.

ஹைதராபாத்தில் பணியாற்றியபோது, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கா்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகிய இடங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு தொழிற்துறை நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளின் பாதுகாப்புப் பணிகளையும், கிழக்கு கடற்கரை துறைமுகங்களின் பாதுகாப்பையும் சந்தோஷ் சிங் கவனித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments