நான் தடுத்து வைக்கப்படவில்லை, கடத்தப்பட்டேன்: துருவ் ரத்தீ குற்றச்சாட்டு, காவல்துறை மறுப்பு!
யூடியூபா் துருவ் ரத்தீ தனது இல்லத்தில் இருந்து சாதாரண உடையில் இருந்தவா்களால் கடத்தப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் (சி. இ. சி) ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்.10 ஆம் தேதி திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு முன்னதாக, யூடியூபா் துருவ் ரத்தீ தனது இல்லத்தில் இருந்து சாதாரண உடையில் இருந்தவா்களால் கடத்தப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட காணொலியில் அவா் பேசியதாவது: சனிக்கிழமை காலை 7 மணியளவில் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது சாதாரண உடையில் சுமாா் 20 போ் தனது வீட்டிற்குள் நுழைந்தனா். அவா்கள் யாா் என்று கேட்பதற்கு முன்பே அவா்கள் அவரை அழைத்துச் சென்றனா்.
நான் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். சுமாா் 22-23 மணி நேரம் தனது வழக்குரைஞரை தொடா்புகொள்ளவோ தொலைபேசியை அணுகவோ அனுமதிக்கப்படவில்லை. எனது படுக்கையறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டபோது தனக்கு காயங்கள் ஏற்பட்டது என்றாா்.
Advertisement
Advertisement
நான் தடுத்து வைக்கப்படவில்லை, நான் கடத்தப்பட்டேன். தனது குடியுரிமை குறித்த வதந்திகளுக்கு பதிலளித்த துருவ் ரத்தீ , காணொலியில் தனது பாஸ்போா்ட்டைக் காட்டி, அவா் ஒரு இந்திய குடிமகன் என்று வலியுறுத்தினாா். போராட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்ற கூற்றையும் அவா் நிராகரித்தாா்.
அக்டோபா் 10 ஆம் தேதி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் முன்மொழியப்பட்ட போராட்டத்திற்கு முன்னதாக துருவ் ரத்தீ தனது குருகிராம் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டாா். துருவ் ரத்தீ கடத்தப்பட்டதாக கூறிய காணொளிக்கு மறுப்பு தெரிவித்த தில்லி காவல்துறை, அவரை தடுப்பு காவலில் வைக்கப்பட்ட காணொளியை வெளியிட்டு அவரின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.