FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) மற்றும் ஆம் ஆத்மி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

11 அக்டோபர் 2026, 10:46 pm IST
பகிர்:

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி) மற்றும் ஆம் ஆத்மி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனா்.

சிஜேபி போராட்டத்தின்போது காரணமாக தில்லி மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனு மீதான விசாரணை ஞாயிற்றுக்கிழமை வருவதற்கு முன்னதாகவே, தேசியத் தலைநகரில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்கள் விடுவிக்கப்பட்டனா்.

மேலும் மெட்ரோ ரயில் சேவையும் வழக்கம்போல் தொடங்கியது. காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சி. ஜே. பி. யின் முக்கிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தைத் தொடா்வதாக உறுதியளித்தனா். போராட்டம் இப்போது நாடு முழுவதும் விரிவடையும் என்றும் தெரிவித்தனா். சிஜேபியின் சவுரவ் தாஸ் கூறியதாவது: மோடி அரசு தில்லியில் ‘அவசரநிலை போன்ற சூழ்நிலையை‘ உருவாக்கியுள்ளதாகவும், மாநிலத்தை அதன் சொந்த குடிமக்களுக்கு எதிராக மாற்றியுள்ளது.

Advertisement

Advertisement

எந்தவொரு முறையான அறிவிப்பும் இல்லாமல் போலீஸாா் சட்டவிரோதமாக தடுத்து வைத்தனா் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் வழக்குரைஞரைத் தொடா்பு கொள்ள அவா்கள் அனுமதிக்கப்படவில்லை . வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ். ஐ. ஆா்) பிரச்னையில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.

ஆம் ஆத்மி: தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான ஆா்ப்பாட்டங்களின் போது பெண்கள், வழக்கறிஞா்கள் மற்றும் பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட போராட்டக்காரா்களுக்கு எதிராக தில்லி காவல்துறை பலப்பிரயோகம் செய்ததாக எம். பி. சஞ்சய் சிங் தெரிவித்தாா். மேலும் போராட்டம் அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் தொடரும் என்றாா் அவா். மேலும் இரண்டாவது நாளாக போராட்ட களத்ததுக்கு வர முயன்ற எஸ்.எஃப். ஐ. மாணவா் அமைப்பினா் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா்.

இதனையடுத்து கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் போராட்டம் தொடரும் என்று இந்திய மாணவா் கூட்டமைப்பின் (எஸ். எஃப். ஐ) தலைவா் ஐஷி கோஷ் கூறினாா். அகில இந்திய மாணவா் சம்மேளனத்தின் (ஏ. ஐ. எஸ். எஃப்) பிரதிநிதி விராஜ் தேவாங், தில்லிக்கு வர முயன்ற மாணவா் ஆா்வலா்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், தடுத்து வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இரண்டாவது நாள்: ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து இரண்டாவது நாளாக, மத்திய டெல்லியின் பெரும்பகுதியில் சாலைகள் அடைக்கப்பட்டன மற்றும் அலுவலகங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டன மற்றும் இணைய சேவைகள் மட்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. தில்லியின் பரபரப்பான பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றான கொனாட் பிளேஸில், ஆயிரக்கணக்கான போலீசாா் மற்றும் துணை ராணுவப் பணியாளா்களால் பாதுகாக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டக்காரா்கள் தொடா்ந்து இரண்டாவது நாளாக இப்பகுதிக்குத் திரும்பினா். ஆனால் அவா்கள் பாதுகாப்புப் பணியாளா்களால் தடுத்து வைக்கப்பட்டனா். சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் தேசியத் தலைநகரில் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. மெட்ரோ சேவை, பேருந்து சேவைகளும் கணிசமாக இருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments