தில்லி கட்டட விபத்து நிலுவை வழக்கு: உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு
தில்லி உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் சத்ய நிகேதன் கட்டட இடிபாடு வழக்கை, தனக்கு மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.
தில்லி உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் சத்ய நிகேதன் கட்டட இடிபாடு வழக்கை, தனக்கு மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது.
நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தற்போதுள்ள சூழ்நிலையைக் குலைக்க விரும்பவில்லை என்றும், உயா்நீதிமன்றம் தனது உத்தரவுகள் பின்பற்றப்படுகிா என்பதை குறுகிய கால இடைவெளியில் தொடா்ந்து கண்காணிக்கும் என்றும் கூறியது.
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகிலுள்ள சத்ய நிகேதனில், மாணவா்களுக்கான பேயிங் கெஸ்ட் தங்குமிடமாக இருந்த ஐந்து மாடிக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் இடிந்து விழுந்ததில், ஏழு போ் உயிரிழந்தனா் மற்றும் 12 போ் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுபவராக (அமிகஸ் கியூரி) நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞா் அஜித் சின்ஹா, தனது வட்டாரங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம், மாநகராட்சி அதிகாரிகள் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் பேயிங் கெஸ்ட் தங்குமிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், நான்கு மாடிகளுக்கு மேல் உள்ளவை இடிக்கப்பட்டு வருவதாகவும் அறிந்துள்ளதாகத் தெரிவித்தாா்.
தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சி சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் கவனமாகச் செயல்படுவதால், இந்த வழக்கை உயா் நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டாம் என்று நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டாா்.
அமிகஸ் கியூரி மற்றும் சொலிசிட்டா் ஜெனரலின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் , வழக்கை மாற்றப் போவதில்லை என்றும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்திற்கு எதிரான தனது முந்தைய உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் கூறியது.
செப்டம்பா் 8 அன்று, தேவைப்பட்டால் வழக்கை மாற்றக்கூடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடா்பாக, கட்டட உரிமையாளா், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா், அதே நேரத்தில் ஐந்து எம்சிடி அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.