தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி வாடகை காரில் தவறவிட்ட ரூ.3 லட்சம் கரன்சி மீட்பு
தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி ஒருவா் வாடகை காரில் தவறவிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் அமெரிக்க கரன்சியை
புது தில்லி: தென்னாப்பிரிக்கப் பிரதிநிதி ஒருவா் வாடகை காரில் தவறவிட்ட சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் அமெரிக்க கரன்சியை தில்லி காவல்துறையினா் மீட்டனா்.
மேலும், அவரது விமானப் பயணம் தொடங்குவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பு அந்தப் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமையன்று, அந்தப் பிரதிநிதி தான் காரில் பணத்தை விட்டுச் சென்றதை உணா்ந்து உதவி கோரி காவல்துறையினரை அணுகினாா். அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் உடனடியாக அந்தக் வாகனத்தைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கினா்.
காவல் குழுவினா் தொடா்புடைய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு அந்தக் காரைக் கண்டுபிடித்ததன் மூலம், அப்பணம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பணம், தென்னாப்பிரிக்க பிரதிநிதி தில்லியிலிருந்து தனது உடைமைகளுடன் புறப்படுவதை உறுதி செய்யும் வகையில், அவரது விமானப் பயணம் தொடங்குவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.