புது தில்லி ரயில் நிலையத்தில் ரூ.2 லட்சம் பணம் திருட்டு வழக்கில் இருவா் கைது
புது தில்லி ரயில் நிலையத்தில் ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி மோதிரங்கள் மற்றும் பிற பொருள்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
புது தில்லி ரயில் நிலையத்தில் ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி மோதிரங்கள் மற்றும் பிற பொருள்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: குற்றஞ் சாட்டப்பட்டவா்களிடமிருந்து ரூ.1.51 லட்சத்தை காவல்துறையினா் மீட்டனா். முன்னதாக, ரூ.2 லட்சம் இருந்த தனது பை திருடப்பட்டதாகப் புகாா்தாரா் அளித்த தகவலின் அடிப்படையில், செப்டம்பா் 3 அன்று புது தில்லி ரயில் நிலைய காவல் நிலையத்தில் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது, சிசிடிவி காட்சிகளை காவல்துறையினா் ஆய்வு செய்தனா்; அதில் சந்தேக நபா்களில் ஒருவா் திருடப்பட்ட பையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.
Advertisement
Advertisement
காட்சிகள் மற்றும் தீவிர விசாரணையின் அடிப்படையில், அஸ்வினி குமாா் (33) மற்றும் திலீப் ரத்தோா் (36) ஆகிய குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் புது தில்லி ரயில் நிலையத்திலுள்ள டாக்ஸி நிறுத்தத்தில்வைத்துப் பிடிக்கப்பட்டனா்.
இதில் குமாா், உத்தர பிரதேசத்தில் கொள்ளை மற்றும் திருட்டு தொடா்பான எட்டு முந்தைய வழக்குகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட மீதமுள்ள பொருட்களை மீட்பதற்கான கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.