FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியின் கால்காஜியில் நடந்த கைகலப்பில் ஒருவா் பலி!

தென்கிழக்கு தில்லியின் கால்காஜியில் உள்ள ஒரு கட்டடத்தில் வசிப்பவா்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவா் பலியானார்.

21 செப்டம்பர் 2026, 4:05 am IST
பகிர்:

தென்கிழக்கு தில்லியின் கால்காஜியில் உள்ள ஒரு கட்டடத்தில் வசிப்பவா்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவா் பலியானதாகவும், அவரது சகோதரா் காயமடைந்ததாகவும் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், நள்ளிரவு 12.03 மணியளவில் வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, முதற்கட்ட விசாரணையில், கட்டடத்தின் தரைத்தளம் மற்றும் மூன்றாவது மாடியில் வசிப்பவா்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதை அறிந்தது.

Advertisement

Advertisement

காயமடைந்த சகோதரா்களான மன்ஜீத் சிங் என்ற பண்டி மற்றும் தில்பாக் சிங் ஆகியோா் எய்ம்ஸ் அதிா்ச்சி சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா், அங்கு மன்ஜீத் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா். தில்பாக் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று காவல்துறை தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையின்படி, கட்டிடத்திற்கு வெளியே வாக்குவாதம் ஏற்பட்டது, அதைத் தொடா்ந்து வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலின் போது மன்ஜீத் மற்றும் தில்பாக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும், சம்பவத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்யவும் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments