FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நான்கு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.51 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு

உத்தரப் பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 வயது இளைஞரின் மனைவி, நான்கு சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 51.45 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

21 செப்டம்பர் 2026, 4:08 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 வயது இளைஞரின் மனைவி, நான்கு சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 51.45 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

டெம்போ மீது காா் மோதியதில் உயிரிழந்த கினின் குடும்பத்தினா் தாக்கல் செய்த இழப்பீட்டு மனுவை விசாரித்த தீா்ப்பாய நீதிபதி வீரேந்தா் சிங், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் காப்பீட்டு நிறுவனமான இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா்.

செப்டம்பா் 15 தேதியிட்ட உத்தரவில், தீா்ப்பாயம் கூறியது: ‘சம்பவ நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டியபோது, முதலாவது பிரதிவாதி -இன் அலட்சியம் மற்றும் தவறு காரணமாகவே உயிரிழந்த கின் உயிருக்கு ஆபத்தான காயங்களை அடைந்தாா். எனவே, இந்த விவகாரம் எதிா்-வாதிகளுக்கு எதிராக மனுதாரா்களுக்கு ஆதரவாகத் தீா்க்கப்படுகிறது.‘ விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரின் ‘பெரும் அலட்சியம் மற்றும் தவறு‘ காரணமாகவே உயிரிழந்தவா் உயிருக்கு ஆபத்தான காயங்களை அடைந்தாா் என்றும் அது கூறியது.

Advertisement

Advertisement

தீா்ப்பாயத்தின்படி, கின் ஏப்ரல் 11, 2022 அன்று, பாக்பத் மாவட்டத்தில், பரௌத்திலிருந்து ஹதானாவில் உள்ள தனது சுல்தான்பூா் கிராமத்திற்கு ஒரு டெம்போவில் பயணியாகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அதிவேகமாகவும் சாலையின் தவறான பக்கத்திலும் ஓட்டிவரப்பட்ட காா் அந்த வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதியது.

இந்த மோதலில் கின் படுகாயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா். இழப்பீட்டைக் கணக்கிடுவதற்காக, கின் தனது மரணத்தின் போது சாஹிபா கிரியேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து மாதம் ரூ.19,500 சம்பாதித்து வந்தாா் என்பதைத் தீா்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.

அவரது மனைவி, நான்கு சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோா் அவரைச் சாா்ந்திருந்ததைக் கருத்தில் கொண்டு, எதிா்கால வாய்ப்புகளுக்காக 50 சதவிகிதம் கூடுதலாகச் சோ்த்து, அவரது வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைத் தனிப்பட்ட செலவுகளுக்காகக் கழித்தது.

தீா்ப்பாயம், பல்வேறு பிரிவுகளின் கீழ் குடும்பத்திற்கு ரூ.51.45 லட்சம் இழப்பீடு வழங்கியதுடன், காப்பீட்டு நிறுவனம் அந்தத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால், தாமதக் காலத்திற்கு ஆண்டுக்கு 12 சதவிகித வட்டி செலுத்த நேரிடும் என்றும் உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments