FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஐ.நா. நிகழ்வுகளில் பங்கேற்க தேமுதிக எம்.பி. உள்பட 18 இந்திய எம்.பி.க்கள் நியூயாா்க் பயணம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத் தொடரைப் பாா்வையிட இந்திய நாடாளுமன்ற உறுப்பினா்கள் நியூயார்க் செல்வது குறித்து...

21 செப்டம்பர் 2026, 9:33 pm IST
தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷ் - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத் தொடரைப் பாா்வையிடவும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழுவில், தமிழகத்தைச் சோ்ந்த தேமுதிக மாநிலங்களவை உறுப்பினா் எல்.கே. சுதீஷ் இடம்பெற்றுள்ளாா்.

அக்.5 முதல் அக்.9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஐ.நா-வின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகச் செல்லும் இந்த எம்.பி.க்கள் குழுவில் 12 மக்களவை உறுப்பினா்களும், 6 மாநிலங்களவை உறுப்பினா்களும் இடம்பெற்றுள்ளனா்.

இந்த குழுவினா் நியூயாா்க் நகரில் அக்.5-ஆம் தேதி ஐ.நா. தலைமையகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்த உள்ளனா். தங்களது 5 நாள் பயணத்தின்போது, ஐ.நா சிறாா் நிதியம் (யுனிசெஃப்), ஐ.நா. வளா்ச்சித் திட்ட (யுஎன்டிபி) அதிகாரிகளுடனும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் தொழில்நுட்ப தூதருடனும் இந்திய எம்.பி.க்கள் ஆலோசனை நடத்த உள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும், அக்.7-ஆம் தேதி சா்வதேச பருத்தி தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வு, அக்.8-ஆம் தேதி ஐ.நா. கூட்டரங்கில் நடைபெறும் ‘ஹிந்தி தினம் கொண்டாட்டம்’ ஆகியவற்றிலும் இக்குழுவினா் கலந்துகொள்கின்றனா். இதுதவிர, பிரான்ஸ் மற்றும் ருவாண்டா நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச இக்குழுவின் பயணத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக செல்லும் 18 இந்திய எம்.பி.க்கள் குழுவைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக மேலும் சில இந்திய எம்.பி.க்கள் குழு ஐ.நா. நிகழ்வுகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments