FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அடுத்தது என்ன?- எம்1 எம்2 எம்3 பணம், மனம், பொருள்

சோம. வள்ளியப்பனும் அத்தகைய வாழ்க்கைக் கோட்பாட்டை மூன்று வகையாக பிரித்துள்ளார். பணம் மனம் பொருள் (பொதிந்த வாழ்க்கை) என பகுத்து விளக்குகிறார்.

55 வினாடிகள் முன்பு
பகிர்:

அடுத்தது என்ன?- எம்1 எம்2 எம்3 பணம், மனம், பொருள்- சோம. வள்ளியப்பன்; பக். 102; ரூ. 140; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014. ✆ 044-4200 9603.

சுயமுன்னேற்றம், நிதி நிர்வாகம் ஆகியவற்றில் தொடர்ந்து புத்தகங்கள் எழுதியும் கலந்துரையாடல்களில் பேசியும் வருகின்ற எழுத்தாளர் சோம. வள்ளியப்பனின் 100-ஆவது புத்தகம் இது. ஒரு எழுத்தாளர் நூறு புத்தகங்கள் எழுதுவது என்பது இமாலயச் சாதனை.

வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. இந்திய பண்பாடு அதை அறம், பொருள், இன்பம், வீடு என்று பகுப்பாய்வு செய்கிறது. தமிழ்ச் சான்றோர் அவ்வையும் ஈதல் அறம், தீதுஇன்றி ஈட்டல் பொருள், காதலர் இருவர் கருத்து ஒருமித்து

Advertisement

Advertisement

ஆதரவுப்பட்டதே இன்பம், பரனை நினைந்து இம் மூன்றையும் விட்டதே வீடு என்று ரத்தினச் சுருக்கமான கோட்பாட்டை முன்வைக்கிறார்.

சோம. வள்ளியப்பனும் அத்தகைய வாழ்க்கைக் கோட்பாட்டை மூன்று வகையாக பிரித்துள்ளார். பணம் மனம் பொருள் (பொதிந்த வாழ்க்கை) என பகுத்து விளக்குகிறார்.

வாழ்க்கைக்குப் பணம் அவசியம். அதற்கு எல்லை என்ன, அளவு என்ன? பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொடங்கி விட்டால் அதற்கு முடிவே கிடையாது. அது அவரவர் மனம் சார்ந்தது. இது போதும் என மனம் நிறைவு கொள்ளும் இடத்தில் பணத்தேடல் முடிவுக்கு வருகிறது. இந்த நிறைவை எட்டிய மனம், அடுத்தவர் நலம் நாடுவதில் ஆர்வம் கொள்கிறது. அந்தப் பணியில் மனம் அமைதி கொள்கிறது.

பணம், மனம், வாழ்க்கை இந்த மூன்றும் எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும், பிரபல மனிதர்கள், தலைவர்கள் இதை எவ்வாறு கடந்து வருகிறார்கள் என்கிற உதாரணங்களையும் காட்டி விளக்குகிறார் நூலாசிரியர். படிக்கப் படிக்க உற்சாகம் தரும் புத்தகம். அத்தகைய வாழ்க்கையை நோக்கி நம்மை நெட்டித் தள்ளுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments