FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2024 (துலாம்)

துலா ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். new year prediction

Updated On : 27 டிசம்பர் 2023, 11:06 am IST
பகிர்:

துலா ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உங்களது நேர்மையான செய்லகளால் மற்றவர்களின் பாராட்டுதல்களையும் -  சுக்கிரனின் பூரண அருளாசியும் ஒருங்கே பெற்ற துலா ராசி அன்பர்களே,

Advertisement

Advertisement

இந்த ஆண்டில் அதி அற்புதமான பலன்களை பெறப் போகிறீர்கள். ராகு கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு செயலும் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு செய்வீர்கள். சகல் செல்வங்களும் பெற்று வாழும் பேறு கிடைக்கும். நண்பர்களின் உதவியும் - குடும்பத்தினரின் பாசமும் - அரசுத்துறை சார்ந்தவர்களின் ஆதரவும் உங்களை சந்தோஷத்தில் நிலைகுலையச் செய்யும். பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அடிக்கடி நிகழும், அதன்மூலம் லாபமும் கிடைக்கும். வீடு - மனை - ஆடை -ஆபரண சேர்க்கை உண்டு. சொல்லும் செயலும் ஒருங்கே இருக்கும். தைரியம் மிளிரும். அதிக புகழ் உண்டாகும். புதிய கல்வி கற்பதற்கான சூழல் ஏற்படும். அதிக புக உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். எதிரிகள் பலமிழந்து போவார்கள். பெற்றொர்ர்கள் உங்களுக்கு அணுசரனையாக இருப்பர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பிணி நீங்கும். தியான - யோக செய்வது நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

அரசு - தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். நீதி - நெர்மையுடன் செயல்பட்டு மக்கள் ஆதரவைப் எப்றுவீர்கள். அத்தியாவசிய கோரிக்கைகள் அனைத்தும் எமேலிடத்தால் அங்கீகரிக்கபப்டும். நடைமுறை ம்வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கன சூழல் உருவாகும். புகழ் அதிகரிக்கும்.வாகனஞ்களை மாற்றூவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பூமி - மனை - வீடு வசதிகளுக்கான வங்கிக் கடனுதவி தாரளாமகக் கிடைக்கும். அலுவலக எதிரிகள் காணாமல் போவார்கள். கிடைக்கும் ஆதாயத்தை சேமிக்கும் பழக்கம் உருவாகும். அலுவகத்தில் சிறப்பாக பணிபுரிவதால் அரசாஞ்கத்தில் சிறப்பு சலுகைகள் கிட்டும். பழையகால் இழப்புகள் இவ்வாண்டில் சரிசமமாகும். வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் பாராட்டு மழையில் நனைவீர்கள்.

தொழிலதிபர்களுக்கு..

பால் - மருத்துவம் - பண்ணைகள் வைத்திருப்போருக்கு சில கட்டுப்பாடுகளால் தொழிலில் விரக்தியான சூழ்நிலை உருவாகலாம். ஆனாலும் மனதில் தைரியத்துடன் பீடு நடை போடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சனி - குரு சஞ்சாரத்தால் ஆட்டோமொபைல் - இயந்திரம் சார்ந்த துறையினருக்கு லாபங்கள் அதிகமாகும். வீடு - அலுவலகம் போன்றவற்றில் பணம் - ஆவணங்கள் - நகைகள் ஆகியவற்றை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது. பஞ்குதாரர்களுடன் வீண் மனக்கிலேசம் ஏற்படூ மனநிம்மதி குறையக்கூடும். கடுமையான உழைப்பை செலவழிக்க வேண்டி வரலாம். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. குருப்பெயர்ச்சிக்கு பின் அனுகூலமான நிலை வந்து சேரும். பாங்க் கடனகள் பைசல் ஆகும். கடந்த ஆண்டில் இருந்து வந்த நிலுவைத் தொகை அனைத்தும் கொஞ்ச கொஞ்சமாக அடையும். ஆடை வடிவமைப்பளருக்கு ஆச்சர்யங்கள் தரும் வைகயில் லாபங்கள் வந்து சேரும்.

மாணவர்களுக்கு..

உயர்கல்வி பயில்வதற்கான சூழல் உருவாகும். கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டி வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். படிப்பில் நல்ல முன்ன்ற்றம் ஏற்படும். நண்பர்கள் - ஆசிரியர்கள் சகஜமாகப் பழகுவார்கள். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். அதிக நேரம் விழித்திருந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் உங்களுக்கு அனுசரனையாக இருந்து உங்களை ஊக்குவிப்பார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று நற்பெயர் எடுப்பீர்கள்.

பெண்களுக்கு..

அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் வேலைகளை திருப்திகரமாக முடித்து நிர்வாகத்தினரிடம் நற்பெயர் வாங்குவார்கள். பணி உயர்வும் - சம்பள உயர்வும் எதிர்பார்த்தபடி  கிடைக்கும். குடும்ப நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். இதனால் முதுகுவலி - உடல்வலி ஏற்படலாம். மாத விலக்கின் போது அதிகமான வயிற்று வலியும் ஏற்படலாம் - கவனம் தேவை. வருமானத்திற்கு எவ்வித குறைவும் இருக்காது. கால்நடை வளர்ப்போருக்கு அதிகமான லாபங்கள் வந்து சேரும். சிறுதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் கிடைப்பதோடு நல்ல அங்கீகாரமும் வந்து சேரும். திருமண வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த பெண்களுக்கு மங்கள நாண் ஏறும் வருடமிது.

கலைஞர்கள்..

திரைக்கலைஞர்கள் கூடுதல் திறமையினை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவார்கள். கிராமியக் கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து குவியும். நகைத்தொழில் செய்பவர்களுக்கு மிக அதிக லாபம் வந்து சேரும். கட்டிட கலைஞர்களுக்கு பொன்னான காலமிது. புதிய வாகனங்கள் சேர்க்கை உண்டு. தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் சேர்க்கையால் தொழில் அபிவிருத்தி ஏற்படும்.

அரசியல்துறையினர்..

பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. மேடைப் பேச்சாளர்களுக்கு சக மனிதர்களாலேயே பிரச்சனைகள் வரலாம். பெண் அரசியல்துறையினருக்கு செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். வீணாண பஞ்சாயத்தில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கவும். வருமானம் நல்ல முறையில் வந்து சேரும். எதிரிகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பது நன்மை தரும்.

சித்திரை 3, 4 பாதம்

எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. ராசியாதிபதியால்  திடீர்  உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.  பணவரத்து இருக்கும்.  கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது. 

சுவாதி

தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மைதரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.    வீண் அலைச்சலும் கூடுதல்  உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.  

விசாகம் 1, 2, 3ம்  பாதம்

குடும்பத்தில் கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  தடைபட்டு வந்த காரியங்கள் நடந்து மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  நன்மைகள் உண்டாகும். மனவருத்தம் நீங்கும். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் மஹாலக்ஷ்ம்யை நம” என்ம்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments