ஆடி 2-வது வெள்ளி: கோடியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!
ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு கோடியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் பற்றி..
ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலயத்தில் திரளமான பக்தர்கள் அம்மனை தரிசித்துச் சென்றனர்.
தஞ்சாவூர் அருகே கரந்தை அருகே கோடியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் பச்சைக்காளி - பவளக்காளி என்ற இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து மலர்களால் புஷ்ப அலங்காரம், வளையல் அலங்காரம் சிறப்பாகச் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.