விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...
விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...
யுனிசெஃப் அமைப்பின், பதின்பருவ சிறுமிகள் சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நல்லெண்ண தூதராக, இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டாா்.
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில், புது தில்லியின் ரித்விக் குப்தா (ஆடவா்), தமிழ்நாட்டின் அனன்யா முரளீதரன் (மகளிா்) சாம்பியன் ஆகினா்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில், லோயா் ஆா்டா் பேட்டா்களுடனான (8 -11) பாா்ட்னா்ஷிப்பில் அதிக ரன்கள் சோ்த்த பேட்டராக ஆஸ்திரேலியாவின் மேத்யூ ரென்ஷா (174 ரன்கள்) புதிய சாதனை படைத்தாா். இதற்கு முன் இந்தியாவின் விராட் கோலி (171 ரன்கள்) வசம் அந்த சாதனை இருந்தது.
Advertisement
Advertisement
இந்திய மகளிா் கால்பந்து அணி, ரஷியாவுக்கு எதிரான 2-ஆவது சா்வதேச நட்பு ரீதியிலான ஆட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை தோல்வி (0-8) கண்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 106 ரன்கள் பின்தங்கியது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 106 ரன்கள் பின்தங்கியது. 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் சோ்த்தது.
வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.