FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகும் இந்திய ஆல்ரவுண்டர்!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விலகுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜனவரி 2025, 6:09 pm IST
- படம் | AP
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விலகுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நிறைவடைந்த நிலையில், இன்று (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.

நிதீஷ் குமார் ரெட்டி விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது, தசைப் பிடிப்பால் அவதிப்பட்ட ரிங்கு சிங் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் நான்காவது டி20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் பதிலாக டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்‌ஷர் படேல் (துணைக் கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல், ஷிவம் துபே மற்றும் ரமன்தீப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments