FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஐசிசி ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற நாதன் ஸ்மித்!

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் நாதன் ஸ்மித் வென்றுள்ளார்.

Updated On : 21 ஜூலை 2026, 7:24 pm IST
நாதன் ஸ்மித் - படம் | ஐசிசி
பகிர்:

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் நாதன் ஸ்மித் வென்றுள்ளார்.

ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், வங்கதேச வீரர் மொசாதேக் ஹொசைன் மற்றும் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் நாதன் ஸ்மித் இடம்பெற்றனர். இவர்களில் சிறந்த வீரருக்கான விருதினை நாதன் ஸ்மித் வென்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாதன் ஸ்மித் சிறப்பாக செயல்பட்டார். அந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன் ஸ்மித் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும், தொடர் நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. அதன் பின், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்ற நாதன் ஸ்மித் உதவினார். பந்துவீச்சில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் அவரது பங்களிப்பை வழங்கினார்.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றது குறித்து நாதன் ஸ்மித் பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது உண்மையில் மிகவும் சிறப்பானது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சிறப்பானதாக அமைந்தது. பொதுவாக நான் தனிப்பட்ட விருதுகளுக்காக விளையாடுவதில்லை. ஆனால், இந்த விருதினை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் வெற்றிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

summary

New Zealand fast bowler Nathan Smith has won the ICC Player of the Month award for June.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments