என்னுடைய பந்துவீச்சு தொடர்பாக கேள்வி கேட்பது பேட்டர்கள் வேலையா? கோபமடைந்த உஸ்மான் தாரிக்!
தன்னுடைய பந்துவீச்சு தொடர்பாக தொடர்ச்சியாக கேள்வி கேட்கும் பேட்டர்களை பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் விமர்சித்துள்ளார்.
தன்னுடைய பந்துவீச்சு ஆக்ஷன் தொடர்பாக கேள்வி கேட்கும் பேட்டர்களை பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் மிஸ்ட்ரி சுழற்பந்துவீச்சாளரான உஸ்மான் தாரிக் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட், உஸ்மான் தாரிக் பந்துவீசியபோது நோபால் என சைகை செய்ததால் அவர் அதிருப்தியடைந்தார்.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரின்போதும் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு ஆக்ஷன் தொடர்பாக பேட்டர்கள் கேள்வி எழுப்பினர். தற்போது தி ஹண்ட்ரட் தொடரில் இந்த பிரச்னை மீண்டும் கிளம்பியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தன்னுடைய பந்துவீச்சு ஆக்ஷன் தொடர்பாக கேள்வி கேட்கும் பேட்டர்களை பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது: என்னுடைய பந்துவீச்சு ஆக்ஷன் சரியா, தவறா என்பதை பார்ப்பது பேட்டர்களின் வேலை கிடையாது. களநடுவர் மற்றும் போட்டி நடுவர்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்வார்கள். போட்டியில் நான் பந்துவீச அனுமதிக்கப்படுகிறேன் என்றால், என்னுடைய பந்துவீச்சு ஆக்ஷன் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.
இந்த சர்ச்சையை தவிர்க்க களநடுவர்கள் மற்றும் போட்டியின் நடுவர்கள்தான் ஏதேனும் செய்ய வேண்டும். துபையில் நடைபெற்ற சர்வதேச டி20 லீக் தொடரில் இங்கிலாந்து வீரர் டாம் பாண்டனும் என்னுடைய பந்துவீச்சு குறித்து டிம் டேவிட் போன்று கேள்வி எழுப்பினார். அப்போது, என்னுடைய தரப்பிலிருந்து அவருக்கு நான் விளக்கம் அளித்தேன். பேட்டர்கள் இதனை நிறுத்த வேண்டும். டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகள் இரக்கமில்லாமல் விளையாடப் படுவதால், நான் வித்தியாசமாக பந்துவீச பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனும் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு ஆக்ஷன் தொடர்பாக கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
Pakistan spinner Usman Tariq has criticized batters who question his bowling action.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.