டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. வருகிற அக்டோபர் 22 முதல் டிசம்பர் 1 இடைவெளியில் அனைத்து வடிவிலான தொடர்களிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையே தொடரும் விளையாட்டுத் துறை தொடர்பான உறவு 100 ஆண்டுகள் எட்டியுள்ளதை கொண்டாடும் விதமாக இந்த சுற்றுப்பயணம் அமையவுள்ளது. டி20 தொடர் நிறைவடைந்த பிறகு, ஒருநாள் தொடர் அதன் பின் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அக்டோபர் 22 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் நவம்பர் 4 ஆம் தேதியும் தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 19 முதல் தொடங்குகிறது.
டி20 தொடர் அட்டவணை விவரம்
முதல் டி20 - அக்டோபர் 22, கிறிஸ்ட்சர்ச்
2-வது டி20 - அக்டோபர் 24, கிறிஸ்ட்சர்ச்
3-வது டி20 - அக்டோபர் 27 - வெலிங்டன்
4-வது டி20 - அக்டோபர் 30 - ஆக்லாந்து
5-வது டி20 - நவம்பர் 1 - ஹாமில்டன்
ஒருநாள் தொடர் அட்டவணை விவரம்
முதல் ஒருநாள் - நவம்பர் 4 - ஆக்லாந்து
2-வது ஒருநாள் - நவம்பர் 7 - வெலிங்டன்
3-வது ஒருநாள் - நவம்பர் 10 - ஹாமில்டன்
4-வது ஒருநாள் - நவம்பர் 13 - பே ஓவல்
5-வது ஒருநாள் - நவம்பர் 15 - பே ஓவல்
டெஸ்ட் தொடர் அட்டவணை விவரம்
முதல் டெஸ்ட் - நவம்பர் 19 - நவம்பர் 23 - வெலிங்டன்
2-வது டெஸ்ட் - நவம்பர் 27 - டிசம்பர் 1 - கிறிஸ்ட்சர்ச்
கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Indian team is set to tour New Zealand to play in T20, ODI, and Test series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.