தொடர் தோல்விகளுக்கு மத்தியில் புதிய உலக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!
தொடர் தோல்விகளுக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதைப் பற்றி...
தொடர் தோல்விகளுக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணி சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்றிரவு (மே 2) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தொடர்ந்து விளையாடி சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-கார்த்திக் சர்மா அரைசதத்தால், இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
இந்தத் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றி, 7 போட்டிகளில் தோல்வியுடன் 9-வது இடத்தில் பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றிரவு விளையாடிய ஐபிஎல்லில் 286-வது போட்டியில் டி20 கிரிக்கெட்டில் 50,000 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மும்பை அணியைத் தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டி அணியான சோமர்செட் அணி 303 டி20 போட்டிகளில் 48,244 ரன்கள் குவித்து இரண்டாமிடத்திலும், ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான பெங்களூரூ அணி 295 போட்டிகளில் விளையாடி, 47,304 ரன்கள் குவித்து மூன்றாமிடத்திலும் இருக்கின்றன.
Despite their struggles, Mumbai scripted a new record, becoming the first franchise to cross the 50,000-run mark in T20 cricket. MI have been a part of 286 games so far in the shortest format of the game.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.