வைபவ் சூர்யவன்ஷி போன்று திறமைசாலியை ஒருபோதும் பார்த்ததில்லை: முன்னாள் இங்கிலாந்து கேப்டன்
வைபவ் சூர்யவன்ஷி போன்று திறமைசாலியை இதற்கு முன் ஒருபோதும் பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி போன்று திறமைசாலியை இதற்கு முன் ஒருபோதும் பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து, தேசிய அணியில் இடம்பெற்று மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அண்மையில் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் 52 பந்துகளில் அதிவேக இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அவர் 204 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியைப் போன்று திறமைசாலியை இதற்கு முன் ஒருபோதும் பார்த்ததில்லை எனவும், உலகின் சிறந்த பேட்டராக உருவாகக் கூடிய திறன் அவருக்கு இருக்கிறது எனவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி விளையாடியதைப் போன்று இதற்கு முன் வேறு யாரும் விளையாடி நான் பார்த்ததில்லை. அவர் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடுவது நம்பமுடியாத விதத்தில் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் அவர் ஒரு புயலாக உருவாகியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது சாதனை நம்பமுடியாத விதத்தில் உள்ளது. ஒவ்வொரு தலைமுறையும் வீரர் ஒருவரைப் பார்த்து ஊக்கமடைவார்கள். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிப்பவராக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார்.
வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அது டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்தும். அவரைப் போன்ற திறமைசாலி ஒருவரை இதற்கு முன் ஒருபோதும் பார்த்ததில்லை. வெள்ளைப் பந்து போட்டிகளைப் போன்று, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன் என்றார்.