FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவுக்கு 61ஆவது பதக்கம்..! வெண்கலம் வென்றது ஸ்குவாஷ் மகளிரணி!

ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வெண்கலம் வென்றது குறித்து...

ஸ்குவாஷ் மகளிரணி வீராங்கனைகள் - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்
பகிர்:

ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இத்துடன் இந்தியாவுக்கு 61 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆசிய விளையாட்டில் மகளிருக்கான ஸ்குவாஷ் அணி அரையிறுதியில் தன்வி கன்னா, அனாஹத் சிங் மற்றும் ஜோஷனா சின்னப்பா ஆகியோர் சீனாவுடன் விளையாடினார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் தன்வி கன்னா 3-1 என வெல்ல, அனாஹத் சிங் 2-3 எனவும் ஜோஷ்னா சின்னப்பா 0-3 எனவும் சீன வீராங்கனைகளிடம் தோல்வியுற்றார்கள்.

இதன்மூலம் சீன அணியினர் 2-1 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்திய மகளிரணி வெண்கலத்துடன் வெளியேறியது.

முன்னதாக ஸ்குவாஷ் பிரிவில் அனாஹத் சிங், அபய் சிங் தலா இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதக்கத்துடன் இந்தியாவுக்கு 61 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் 10 தங்கம், 21 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இத்துடன் பதக்க பட்டியலில் இந்திய அணி 7ஆவது இடத்தில் நீடிக்கிறது.

summary

India's 61st medal! Women's squash team Tanvi Khanna, Anahat Singh and Joshana Chinappa wins bronze!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments