FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்கும்போது காயம்..! இந்தியா உடனான தொடரில் ரச்சின் ரவீந்திரா விலகல்!

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறித்து...

19 செப்டம்பர் 2026, 1:43 pm IST
ரச்சின் ரவீந்திரா - படம்: எக்ஸ் / நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்
பகிர்:

நியூசிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா (26 வயது) தொலைக்காட்சி விளம்பரத்தில் நடிக்கும்போது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபரில் இந்தப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.

இந்த நிலையில், ஆக்லாந்தில் விளம்பரத்தில் டைவ் அடிக்கும் காட்சியில் நடிக்கும்போது ரச்சின் ரவீந்திராவுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நியூசிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா 51 டி20 போட்டிகளில் 759 ரன்களும், 39 ஒருநாள் போட்டிகளில் 1,424 ரன்களும், 24 டெஸ்ட் போட்டிகளில் 1865 ரன்களும் எடுத்துள்ளார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்தக்கூடிய இவர் மொத்தமாக 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தக் காயம் எப்போது குணமடையும் எனத் தெரியவில்லை. டி20 போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் எனவும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நியூசிலாந்தின் மேலாளர் மைக் சாண்டில் பேசியிருப்பதாவது:

இது மிகவும் துரதிஷ்டவசமானது. ரச்சினுக்கு இப்படி நடந்தது நினைத்து வருத்தமடைகிறோம். அவர் நலமடைவதே முதன்மை குறிக்கோளாக இருக்கிறது. விரைவில் களத்திற்கு திரும்ப விரும்புகிறோம்.

அனைத்து வீரர்களுக்குமான கமர்ஷியல் படப்பிடிப்பும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களுடன்தான் நடைபெறும். இது முற்றிலும் துரதிஷ்டவசமானது. வருங்காலங்களில் இப்படி நடக்காமல் இருக்க இதனை ஆய்வு செய்வோம் என்றார்.

summary

New Zealand star Rachin Ravindra injures shoulder in TV shoot gone wrong

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments