FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

25 செப்டம்பர் 2026, 9:52 pm IST
ஜோஸ் பட்லர் - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக வென்ற நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 27) நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோஸ் பட்லர் காயம் காரணமாக கடைசி ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோஸ் பட்லருக்குப் பதிலாக அணியில் டேன் லாரன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

summary

Jos Buttler has withdrawn from the final ODI against Sri Lanka due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments