FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அதிக சிக்ஸர்கள்: ரோஹித் சர்மா நிகழ்த்திய புதிய சாதனை

76 ரன்கள் எடுத்த 35 வயது ரோஹித் சர்மா, 5 சிக்ஸர்களை அடித்தார்.

Updated On : 13 ஜூலை 2022, 1:30 pm IST
பகிர்:

ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி பும்ராவின் அற்புதமான பந்துவீச்சில் வீழ்ந்தது. அந்த அணி, 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். 7.2 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார் பும்ரா. ஷமி 3 விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா 76, ஷிகர் தவன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

Advertisement

Advertisement

2-வது ஒருநாள் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் 76 ரன்கள் எடுத்த 35 வயது ரோஹித் சர்மா, 5 சிக்ஸர்களை அடித்தார். இதன்மூலம் 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளார்.

ஒருநாள்: அதிக சிக்ஸர்கள்

அஃப்ரிடி - 351
கெய்ல் - 331
ஜெயசூர்யா - 270
ரோஹித் சர்மா - 250
தோனி - 229
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments