FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் அழிகிறதா?: ரோஹித் சர்மா பதில்

ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Updated On : 18 ஆகஸ்ட் 2022, 12:56 pm IST
பகிர்:

ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், போட்டி அட்டவணை எப்படி அமையவேண்டும் என்கிற விவாதம் உருவாகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் இழுவையாக, சுவாரசியமின்றி உள்ளதாகத் தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அழிவதாக எண்ணுகிறீர்களா என ஒரு பேட்டியில் கேட்கப்பட்டதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

Advertisement

Advertisement

அது எந்த வகையாக இருந்தாலும் கிரிக்கெட் எனக்கு முக்கியம். ஒருநாள் கிரிக்கெட்டோ டி20யோ டெஸ்ட் கிரிக்கெட்டோ முடிவுக்கு வருகிறது என எப்போதும் கூற மாட்டேன். புதிதாக இன்னொரு வகை கிரிக்கெட் இருந்தாலும் நல்லது. கிரிக்கெட்டில் ஈடுபடுவது தான் எனக்கு முக்கியம். சிறுவயது முதல் இந்தியாவுக்காக விளையாடுவதே பெரிய கனவாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் எப்போது விளையாடினாலும் மைதானம் நிரம்பி இருக்கும். மக்களின் ஆர்வம் எப்போதும் போல் உள்ளது. எந்த வகை கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு. எனக்கு மூன்று வகை கிரிக்கெட்டும் முக்கியம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments