உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரணாய் காலிறுதிக்குத் தகுதி
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்களான பிரணாய் - லக்ஷயா சென் ஆகிய இருவரும் மோதினார்கள். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 21-17, 16-21, 17-21 என வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார் பிரணாய். இருவரும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதி இருவரும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களிலும் பிரணாய் வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.