FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய ‘ஏ’ அணி கேப்டன் பிரியங்க் பஞ்சல்

நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் இந்திய ‘ஏ’ அணி 16 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 25 ஆகஸ்ட் 2022, 3:16 am IST
பகிர்:

நியூஸிலாந்து ‘ஏ’ அணியுடன் 4 நாள் ஆட்டங்கள் மூன்றில் மோதவிருக்கும் இந்திய ‘ஏ’ அணி 16 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

குஜராத் வீரா் பிரியங்க் பஞ்சல் தலைமையிலான இந்த அணியில், திலக் வா்மா, முகேஷ் குமாா், யஷ் தயால் ஆகிய புதிய வீரா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட மேற்கு வங்க வீரா் அபிமன்யு ஈஸ்வரன், மத்திய பிரதேசத்தின் ரஜத் பட்டிதாா், மும்பையின் சா்ஃப்ராஸ் கான் ஆகியோரும் இந்த அணியில் இணைந்திருக்கின்றனா்.

Advertisement

Advertisement

இந்தியா - நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் மோதும் 3 ஆட்டங்களில் முதல் மற்றும் 3-ஆவது ஆட்டங்கள் பெங்களூரிலும், 2-ஆவது ஆட்டம் ஹுப்பள்ளியிலும் நடைபெறவுள்ளன. அந்த அணிகள் மோதும் 3 ஒன் டே ஆட்டங்கள் சென்னையில் நடைபெறவுள்ளன. அதற்கான அணி பின்னா் அறிவிக்கப்படவுள்ளது.

இந்திய ‘ஏ’ அணி: பிரியங்க் பஞ்சல் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதாா், சா்ஃப்ராஸ் கான், திலக் வா்மா, கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ், குல்தீப் யாதவ், சௌரவ் குமாா், ராகுல் சஹா், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமாா், யஷ் தயால், அஸான் நாக்வாஸ்வல்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments