ஜனநாயகத்தைக் காக்க ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: தில்லியில் வைகோ, திருமாவளவன் பேட்டி
தில்லியில் வைகோ, திருமாவளவன் அளித்த பேட்டி பற்றி...
ஜனநாயகத்தைக் காக்க ஒருமித்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தில்லியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற "இண்டி' கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இரு தலைவர்களும் தனித்தனியாக செய்தியாளர்களிடம் பேசினர். அதன் விவரம் வருமாறு:
வைகோ (மதிமுக): தேசத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் இது. இது தொடர்பாக ஒருமித்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளையும் தொடர்புகொண்டு, போராட்டங்கள் மற்றும் கூட்டணியில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
தொல்.திருமாவளவன்: ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க இண்டி கூட்டணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி இண்டி கூட்டணி சார்பில் வழக்குத் தொடரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து மாபெரும் ஜனநாயகப் படுகொலை அரங்கேறி வருகிறது. இதற்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.