ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர்
2014-க்குப் பிறகு எந்தவொரு முதல்தர, லிஸ்ட் ஏ கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் விளையாடவில்லை.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
35 வயது ராகுல் சர்மா இந்திய அணிக்காக 2011, 2012 வருடங்களில் 4 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் டெக்கன் சார்ஜர்ஸ், புணே, தில்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ராகுல் சர்மா அறிவித்துள்ளார். 2011-ல் புணே அணிக்காக விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துக் கவனத்தை ஈர்த்தார். இதனால் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2014-க்குப் பிறகு எந்தவொரு முதல்தர, லிஸ்ட் ஏ கிரிக்கெட் ஆட்டங்களிலும் அவர் விளையாடவில்லை. காயம் காரணமாக பல்வேறு வாய்ப்புகளை இழந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் சாலைப் பாதுகாப்பு உலகத் தொடர் கிரிக்கெட் போட்டியில் விளையாட சச்சின் டெண்டுல்கர் வாய்ப்பு வழங்கியதால் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராகுல் சர்மா. அடுத்ததாக வெளிநாட்டு லீக் போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.