FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா: ஹைலைட்ஸ் விடியோ

இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

Updated On : 19 டிசம்பர் 2022, 11:51 am IST
பகிர்:

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

மிகச்சிறந்த கால்பந்து ஆட்டம் என ரசிகர்களாலும் நிபுணர்களாலும் பாராட்டைப் பெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோலை 23-வது நிமிடத்தில் பெனால்டி வழியாக அடித்தார் மெஸ்ஸி. பிறகு 36-வது நிமிடத்தில் டி மரியா ஒரு கோல் அடித்து 2-0 என்கிற முன்னிலையை ஏற்படுத்தினார். பொறி பறந்த 2-வது பாதியில் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து அசத்தினார் பிரான்ஸின் எம்பாப்பே. 90 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் 108-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க, 118-வது நிமிடத்தில் எம்பாப்பே இன்னொரு கோல் அடித்து 3-3 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பிறகு இரு அணிகளாலும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியாததால் ஆட்டம் பெனால்டி பகுதிக்குச் சென்றது. இதில் 4-2 என ஆர்ஜென்டீனா வென்று கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments