ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
31 வயது ஸ்டோக்ஸ், 83 டெஸ்டுகள், 104 ஒருநாள், 34 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 0, 21, 27 என ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்துள்ளார் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகச் சமீபத்தில் அவர் நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் மட்டும் விளையாடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பது கடினமாக இருப்பதால் இம்முடிவை எடுத்ததாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.